சண்டிகர் : இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான அமரிந்தர் சிங்க் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்ப்பித்தார்.
சில நாட்களுக்கு முன்னர்தான் பஞ்சாப்பின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் தமிழ் நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
பன்வாரிலாலுக்குப் பதிலாக தமிழ் நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பஞ்சாப், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகும். அந்த மாநில முதலமைச்சரான அமரிந்தர் சிங் கடந்த சில மாதங்களாகவே, அந்த மாநிலத்தில் அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தார்.
பஞ்சாப்பின் அடுத்த மாநில முதல்வராக சுனில் ஜாக்கர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
அமரிந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் விளையாட்டாளரான நவ்ஜோத் சிங் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இயங்கி வந்தார்.