Home நாடு அவசர காலம் முடிவுற்றதா இல்லையா? குழப்பத்தில் நாடும் மக்களும்!

அவசர காலம் முடிவுற்றதா இல்லையா? குழப்பத்தில் நாடும் மக்களும்!

531
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி. ஜனவரியில் அமுல்படுத்தப்பட்ட 6 மாத கால அவசர கால சட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது.

அவசர கால சட்டத்தை நீட்டிக்காததால் இயல்பாகவே அந்த சட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது என சட்டங்கள் கூறுகின்றன.

ஆனாலும், மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி அவசர கால சட்டம் சட்டம் முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டோ, மாமன்னரின் ஒப்புதலுடனோ இரத்து செய்யப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

இதுவரை அப்படிச் செய்யப்படவில்லை. அப்படிச் செய்யாவிட்டால் அவசர கால சட்டம் இயல்பாகவே மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் மலேசிய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குழப்படிகள், மாமன்னரின் அறிக்கை, அதற்கு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிலறிக்கை இப்படி எல்லாம் சேர்ந்து நாட்டில் இப்போது அரசியலமைப்பு குழப்பமும், ஒரு நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது.

எனவே, இன்றிலிருந்து அவசர கால சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்தில் நாடும் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர்.