Home இந்தியா ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து தோல்வி

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து தோல்வி

629
0
SHARE
Ad

தோக்கியோ : பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் பங்கு பெறுவார்.

26 வயதான சிந்து 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் அவர் சீனாவின் ஹே பிங் ஜியாவ் என்ற விளையாட்டாளரைச் சந்திக்கிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அவர் இரண்டு பதக்கங்களைப் பெற்ற இந்திய விளையாட்டாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

16 பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிந்து கடந்த புதன்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங் விளையாட்டாளரை 30 நிமிடங்களில் தோற்கடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானின் அகேன் யாமாகுச்சி என்ற விளையாட்டாளரை தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களிலும் 21-13, 22-20 புள்ளிகளில் தோற்கடித்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.

எனினும் இன்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான போட்டியில் தைவானின் தாய் ட்சு யீங் என்ற விளையாட்டாளரிடம் இரண்டு தொடர்ச்சியான ஆட்டங்களில்  சிந்து தோல்வியடைந்தார்.