Home நாடு ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ஆரோன் சியா – சோ...

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை!

575
0
SHARE
Ad
ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை

தோக்கியோ :ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் தொடங்கியதில் இருந்து மலேசியாவுக்கு பதக்கங்கள் ஏதும் கிடைக்குமா எனக் காத்திருந்த விளையாட்டு இரசிகர்களுக்கு இறுதியில் ஓர் இனிப்பான செய்தி கிடைத்திருக்கிறது.

பூப்பந்துக்கான இரட்டையர் போட்டியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை இன்று வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது. தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மலேசியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இந்தோனிசியாவின் முகமட் அஹ்சான் – ஹென்ட்ரா செத்தியாவான் இணையை 52 நிமிடங்களில் 17-21, 21-17, 21-14 என்ற புள்ளிகளில் மூன்று ஆட்டங்களில் விளையாடி இறுதியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை வெற்றி கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது. நமது நாட்டிற்கு தோக்கியோ ஒலிம்பிக்சில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை சீனாவின் லீ ஜூன் ஹூய்-லியூ யூ இணையிடம் வீழ்ந்தனர்.

கடுமையான போராட்டத்தை வழங்கினாலும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 24-22, 21-13 புள்ளிகளில் மலேசிய இணையர் தோல்வியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அவர்கள் மீண்டும் களமிறங்கி நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றனர்.