Home நாடு ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை தோல்வி

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை தோல்வி

742
0
SHARE
Ad
ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை

தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவுப் பூப்பந்து போட்டிகளில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் பெறும் மலேசியாவின் நம்பிக்கை தகர்ந்தது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாலை 7.30 மணியளவில் (மலேசிய நேரம்) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை சீனாவின் லீ ஜூன் ஹூய்-லியூ யூ இணையிடம் வீழ்ந்தனர்.

கடுமையான போராட்டத்தை வழங்கினாலும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 24-22, 21-13 புள்ளிகளில் மலேசிய இணையர் தோல்வியடைந்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அவர்கள் மீண்டும் களமிறங்குகின்றனர்.