Home உலகம் ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : லீ ஸீ ஜியா மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார்!

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : லீ ஸீ ஜியா மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார்!

667
0
SHARE
Ad
லீ ஸீ ஜியா

பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் மலேசியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் லீ ஸீ ஜியா.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லீ இந்தியாவின் லக்சயா சென் என்ற விளையாட்டாளரை லீ தோற்கடித்தார். மலேசியா விளையாட்டாளர்களின் வரிசையில் ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெறும் மூன்றாவது விளையாட்டாளர் லீ ஆவார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்சில் டத்தோ ரஷிட் சீடேக் வெண்கலப் பதக்கம் பெற்றார். அடுத்து பெய்ஜிங் 2008, இலண்டன் 2012, ரியோ டி ஜெனிரோ 2016 என வரிசையாக 3 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் டத்தோ வீரா லீ சோங் வெய் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் இரட்டையர் போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணை டென்மார்க்கின் விளையாட்டாளர்கள் கிம் ஆஸ்ட்ரப் – ஆண்டர்ஸ் ராஸ்முஸ் இணையை தோற்கடித்து மலேசியாவுக்கு 2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் முதல் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

பாரிஸ் ஒலிம்பிக்சில் மலேசியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இப்போது இரண்டாவது பதக்கத்தை லீ ஸீ ஜியா ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளார்.