Home உலகம் ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவுக்கு முதல் வெண்கலப் பதக்கம்!

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவுக்கு முதல் வெண்கலப் பதக்கம்!

552
0
SHARE
Ad

பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணை டென்மார்க்கின் விளையாட்டாளர்கள் கிம் ஆஸ்ட்ரப் – ஆண்டர்ஸ் ராஸ்முஸ் இணையை தோற்கடித்து மலேசியாவுக்கு 2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் முதல் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

பாரிஸ் ஒலிம்பிக்சில் மலேசியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட மலேசிய இணை, இரண்டாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றனர். மூன்றாவது ஆட்டத்தில் கடுமையான போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.

பெர்லி டான் – எம்.தீனா இணையினர் இணை மகளிருக்கான இரட்டையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணை வெண்கலப் பதக்கத்தை வெற்றி கண்டிருப்பது மலேசியாவுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது.