Home உலகம் ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி!

ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி!

375
0
SHARE
Ad
பெர்லி டான் – தீனா ஜோடி (கோப்புப் படம்)

பாரிஸ் : மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கக் கனவை நோக்கி பூப்பந்து போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்லி டான் – எம்.தீனா இணை துரதிர்ஷ்டவசமாக சீனாவின் சென் குயிங் சென் – ஜியா யீ ஃபான் (Chen Qingchen-Jia Yifan) இணையிடம் தோல்வியைத் தழுவினர். சீனாவின் இந்த இரட்டையர் விளையாட்டாளர்கள் உலகத் தர வரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

பெர்லி டான் – எம்.தீனா இணை தோல்வியைத் தழுவினாலும் கடுமையாகப் போராடினர். 12-21, 21-18, 15-21 என மூன்று ஆட்டங்களில் புள்ளிகள் பெற்று 74 நிமிடங்கள் தீவிரமாக விளையாடினர்.

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுகளில் பெண்களுக்கான போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் விளையாட்டாளர்கள் அவர்களாவர்.

#TamilSchoolmychoice

அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர்கள் ஈடுபடுவர்.