Home உலகம் ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பெர்லி டான்- எம்.தீனா இணை மலேசியக் கனவை நனவாக்குவார்களா?

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பெர்லி டான்- எம்.தீனா இணை மலேசியக் கனவை நனவாக்குவார்களா?

251
0
SHARE
Ad
பெர்லி டான் – தீனா ஜோடி (கோப்புப் படம்)

பாரிஸ் : இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கியிருக்கின்றனர் மலேசிய விளையாட்டாளர்கள். மலேசியர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் கனவை நோக்கி பெர்லி டான் – எம்.தீனா இணை பூப்பந்து போட்டிகளில் அபார சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கான போட்டிகளில் கால் இறுதிப் போட்டியில் நுழைந்த அவர்கள் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தென் கொரியாவின் கிம் சோ யங்-கோங் ஹீ யோங் இணையை தங்களின் அபார ஆட்டத்தினால் இரண்டே ஆட்டங்களில் 21-12, 21-13 என்ற புள்ளிகளில் 39 நிமிடங்களில் தோற்கடித்தனர்.

இதைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்திற்கு மலேசிய இணை முன்னேறியுள்ளது.இதற்கு முன்னர் 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிகஸ் போட்டிகளில் மலேசியாவின் விவியன் ஹூ- வூன் கே வெய் இணை கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. எனினும் அந்த ஆட்டத்தில் அவர்கள் தோல்வியடைந்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது, பெர்லி டான் – எம்.தீனா இணை அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியிருப்பதைத் தொடர்ந்து மலேசியாவின் தங்கப் பதக்கக் கனவு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.