Home கலை உலகம் ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்! என்ன நோய்?

ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்! என்ன நோய்?

302
0
SHARE
Ad

மும்பை : சில வாரங்களுக்கு முன்னால் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஷாருக்கான் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

எந்த நோய் பிரச்சனைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறு ஆரூடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

ஷாருக்கான் மும்பை மருத்துவமனையில் கண் சிகிச்சை பெற்றார் என்றும் அந்த சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கூடுதல் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார் என ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்தது.

#TamilSchoolmychoice

ஷாருக்கானின் அண்மையத் திரைப்படங்களான ஜவான், பதான் ஆகியவை வசூலில் சாதனை புரிந்தன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கு பெறும் கொல்கத்தா ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் ஷாருக்கான் இருந்து வருகிறார்.