Home இந்தியா கேரளா வயநாடு நிலச்சரிவு: 158 மரணங்கள்! 200-க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரளா வயநாடு நிலச்சரிவு: 158 மரணங்கள்! 200-க்கும் மேற்பட்டோர் காயம்!

433
0
SHARE
Ad

திருவனந்தபுரம்: கேரளாவின் நிலச்சரிவுகள் குறித்து முன்னரே பலமுறை எச்சரித்தோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவிக்க – நிலச்சரிவுக்கான காரணங்களை நீங்கள் தவிர்க்கும் விதமாக மாநில அரசாங்கம் மீது பழிபோட்டுத் தப்பிக்கக் கூடாது என கேரளா முதலமைச்சர் பிரனாய் விஜயன் பதிலடி கொடுக்க – வயநாடு நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கேராளவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அனைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாகவும் கேரளா முதல்வர் பினராய் விஜயன் அறிவித்தார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் வெள்ளத்தினால் மிக மோசமான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தீவிர மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வயநாடு வட்டாரம், காங்கிரஸ் தலைவரும்  இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியாகும்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.

இந்த நிலச்சரிவு சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியிருக்கின்றன. பல இடங்களில் பாலங்கள் அடித்துச் சென்றதால் மீட்புக் குழுக்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

மேலும் பலர் இந்த நிலச்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிக அதிகமாக மழை பெய்த காரணத்தால் கேரளாவில் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றன. மோசமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.