Home இந்தியா கேரளா வயநாடு நிலச்சரிவில் பலியானவர் எண்ணிக்கை 120!

கேரளா வயநாடு நிலச்சரிவில் பலியானவர் எண்ணிக்கை 120!

304
0
SHARE
Ad

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120-ஆக உயர்ந்துள்ளது.

தீவிர மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வயநாடு வட்டாரம், காங்கிரஸ் தலைவரும்  இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியாகும்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.

#TamilSchoolmychoice

இந்த நிலச்சரிவு சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியிருக்கின்றன. பல இடங்களில் பாலங்கள் அடித்துச் சென்றதால் மீட்புக் குழுக்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

மேலும் பலர் இந்த நிலச்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிக அதிகமாக மழை பெய்த காரணத்தால் கேரளாவில் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றன. மோசமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.