Home நாடு கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேற நெருக்குதல் அதிகரிக்கிறது!

கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேற நெருக்குதல் அதிகரிக்கிறது!

218
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சீனப் பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்கள் நிதி உதவி வழங்கும் விவகாரத்தில் பாஸ் கட்சிக்கும், கெராக்கான் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து கெராக்கான் வெளியேற வேண்டும் என்ற நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக, பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் தலைமை வகிக்கும் பெர்சாத்து கட்சியின் தேர்தல்களால் அந்தக் கட்சியில் கடுமையான மோதல்கள் எழக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கெராக்கான் பெரிக்காத்தானிலிருந்து வெளியேற வேண்டும் என பாஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

ஆகக் கடைசியாக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நோர் கெராக்கானை சாடியுள்ளார். மற்றவர்களை மதிக்காவிட்டால் கெராக்கான் பெரிக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என சனுசி கூறியுள்ளார்.

கெராக்கான் துணைத் தலைவர்  ஓ தோங் கியோங் கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேற வேண்டும் என அறைகூவல் விடுத்தார். அதைத் தொடர்ந்து பெரிக்காத்தானில் இருந்து வெளியேறுவதா இல்லையா என்ற விவாதங்களால் கெராக்கான் கட்சியிலும் உறுப்பினர்களிடையே பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.