Home உலகம் ஹாமாஸ் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹானியே கொல்லப்பட்டார்

ஹாமாஸ் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹானியே கொல்லப்பட்டார்

212
0
SHARE
Ad
அன்வார், இஸ்மாயில் ஹானியேயை கத்தாரில் கடந்த மே மாதம் சந்தித்தபோது…

டெஹ்ரான் (ஈரான்) : பாலஸ்தீன ஆதரவுப் போராளிக் குழுவான ஹாமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே டெஹ்ரானில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாமாஸ் பிரிவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் பொதுவில் அதிகம் காணப்பட்ட தலைவராகவும் அவர் திகழ்ந்தார். கடந்த மே மாதம் மலேசியப் பிரதமர் கத்தாருக்கு வருகை மேற்கொண்டபோது இஸ்மாயில் ஹானியேயைச் சந்தித்தது சில சர்ச்சைகளை உருவாக்கியது. இருப்பினும் எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவரையும் சந்திக்கும் தன் உரிமையை அன்வார் தற்காத்துப் பேசினார்.

ஹானியேயின் மறைவு ஹாமாஸ் அமைப்பிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களில் கொல்லப்பட்ட முக்கிய ஹாமாஸ் தலைவர்களில் ஹானியே ஒருவராவார்.

இதற்கிடையில் லெபனானின் பெய்ரூட் நகரில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில் ஹெஸ்போல்லா அமைப்பின் இராணுவத் தளபதியான புவாட் சுக்ரி கொல்லப்பட்டார்.