Home நாடு கேமரன் மலையில் மண் சரிவு – 3 பேர் மரணம்

கேமரன் மலையில் மண் சரிவு – 3 பேர் மரணம்

404
0
SHARE
Ad
கேமரன் மலை கோப்புப் படம்

கேமரன் மலை : மலேசியாவின் பிரபல மலைப்பிரதேச சுற்றுலாத் தலமான கேமரன் மலையில் கம்போங் ராஜா புளுவேலி, என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து அந்த விபத்தில் புதையுண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை, ஜனவரி 27) அதிகாலை வரையிலான நிலவரம் இதுவாகும். வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அதிகாலை ஏற்பட்ட இந்த மண் சரிவில் 5 மியன்மார் குடியுரிமை பெற்ற நபர்கள், தங்களின் வீடுகளுடன் உயிருடன் புதையுண்டனர் என நம்பப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் பரிசோதனைக்காக கேமரன் மலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.