Home நாடு கேமரன் மலையில் மண் சரிவு – சிக்கிக் கொண்ட கார்கள் – 2 சடலங்கள் மீட்பு

கேமரன் மலையில் மண் சரிவு – சிக்கிக் கொண்ட கார்கள் – 2 சடலங்கள் மீட்பு

639
0
SHARE
Ad

சிம்பாங் பூலாய் : கேமரன் மலை பகுதியில் சிம்பாங் பூலாய்-புளூவேலி சாலையில் நேற்று நிகழ்ந்த மண் சரிவில் இரண்டு வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் நேற்றிரவு முழுவதும் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுவரையில் 2 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.ஒருவர் 31 வயது லாரி டிரைவராவார். இவர் முகமட் ஹாபிஸ் ஹாம்டி (Muhammad Hafiz Hamdi) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்னொருவர் எம்பிவி (MPV) எனப்படும் சொகுசுக் காரில் இருந்த நபராவார்.

#TamilSchoolmychoice

எம்பிவி காரில் இருந்தவர் சுமார் 50 வயது கொண்டவர். கிள்ளானைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவா மூசாங்கிலிருந்து பினாங்கு நோக்கி இவர் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் மண் சரிவில் சிக்கிக் கொண்ட வாகனங்களில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது நிர்ணயிக்கப்படாததால் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்கின்றன.