சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, டிசம்பர் 16 முதல் ஒப்ஸ் லெஸ்தாரி 2 அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலைப்பாங்கான விவசாயப் பகுதியில் அமைதியின்மை மற்றும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.
சட்டத்தின் நிலையான இயக்க நடைமுறை படி கடந்த திங்களன்று 200 பேர் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் எதிர்ப்புக் கூட்டத்தை காவல் துறையினர் சட்டப்பூர்வமாக மேற்கொண்டதாக அப்துல் ஜாலில் தெரிவித்தார்.
“சட்ட விரோத விவசாய நில உரிமையாளர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த இடத்தை காலி செய்ய அவகாசம் அளிப்பது உட்பட, சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பகாங் மாநில அரசிடமிருந்து நாங்கள் உத்தரவாதம் பெற்றோம்,” என்று அவர் கூறினார்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு அரசியல்வாதிகள் உட்பட ஏழு நபர்களும் ஒரே நாளில் சாட்சியங்களை வழங்கிய பின்னர் காவல் துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
“அன்றைய தினம் குழந்தைகளை கைது செய்யவில்லை என்பதையும், சமூக தளங்களில் பரப்பப்பட்ட படங்கள் பொய்யானவை என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். கேமரன் மலை சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் பாதுகாப்பானது” என்று அவர் கூறினார்.