Home One Line P1 1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்!- பகாங் மாநில அரசு

1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்!- பகாங் மாநில அரசு

676
0
SHARE
Ad

கேமரன் மலை: தற்காலிக தொழில் உரிமம் (எல்பிஎஸ்) அந்தஸ்தில் செயல்பட்ட, கேமரன் மலையின் 1,018 காய்கறி விவசாயிகளுக்கு, பதிவுசெய்யப்பட்ட வாடகைகள் மூலம் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், உலு தெலோம், ரிங்லெட் மற்றும் தானா ராத்தா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 5,526,219 ஹெக்டேர் நிலத்தின் ஒரு பகுதி நிலங்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது  என்று பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

சலுகைக் கடிதம் இன்று (நேற்று புதன்கிழமை) முதல் கட்டங்களில் வழங்கப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று வருட காலத்திற்கு ஒரு குத்தகைதாரருக்கு அதிகபட்சமாக மூன்று ஏக்கர் (சுமார் 1.2 ஹெக்டேர்) பரப்பளவு வழங்கப்படும்.”

#TamilSchoolmychoice

குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கான நல்ல வேளாண் நடைமுறைகளின் (மைகாப்) கட்டாய சான்றிதழ் தேவைகளில் ஒன்றாகும்என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாடகை வழங்குவதற்கான நடவடிக்கையின் மூலம், விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு இடையில் சமநிலையை வழங்குவது போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று வான் ரோஸ்டி கூறினார்.