Home நாடு அம்னோ உதவித் தலைவர் தேர்தல் : காலிட் நோர்டின், வான் ரோஸ்டி, ஜோஹாரி முன்னிலையில்…

அம்னோ உதவித் தலைவர் தேர்தல் : காலிட் நோர்டின், வான் ரோஸ்டி, ஜோஹாரி முன்னிலையில்…

504
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ காலிட் நோர்டின்

கோலாலம்பூர் : அம்னோ உட்கட்சித் தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் காலிட் நோர்டின், வான் ரோஸ்டி, ஜோஹாரி ஆகிய மூவரும் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மூவரில் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் மட்டும் உதவித் தலைவராக மீண்டும் போட்டியிடுகிறார். மற்ற இருவரும் முதன் முறையாகப் போட்டியிட்டவர்கள்.

ஜோகூர் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினரான காலிட் நோர்டின் உயர்கல்வி அமைச்சராகவும் இருக்கிறார்.

வான் ரோஸ்டி
#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் பகாங் மாநில மந்திரி பெசார் ஆவார். இறுதி நேரத்தில் வேட்பாளராக நுழைந்த இவர் முதலாவது உதவித் தலைவராக அதிக வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோஹாரி அப்துல் கனி

டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி  தித்தி வாங்சா நாடாளுமன்ற உறுப்பினராவார்.