Home இந்தியா அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தலாம் – ஆனால் முடிவு அறிவிக்கக் கூடாது

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தலாம் – ஆனால் முடிவு அறிவிக்கக் கூடாது

779
0
SHARE
Ad

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பின் விண்ணப்பத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தரவில்லை.

மாறாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை, பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவு பெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும்.

#TamilSchoolmychoice

இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் மார்ச் 22ம் தேதி வரை முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பொதுக்குழு முடிவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முடிவு வரும் முன் இவர்கள் வேட்புமனு தாக்கலை தொடங்கி உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும்.  சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொன்னதை ஏற்க முடியாது. 10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்யப்பட்டது தவறு. 36 மணிநேரத்தில் 20 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிதல், வழிமொழிதல் எப்படி சாத்தியம்? ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் அடிப்படை தொண்டர்கள் போட்டியிட முடியாது. பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டது சரி இல்லை.

ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் வாக்காளர் பட்டியல் எங்கே? என அடுக்கடுக்காக ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சியை நடத்த முடியும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ஒற்றை தலைமை அவசியம் ஆகிறது. பொதுச்செயலர் தேர்தல் நடைபெறுவதில் தவறு இல்லை. இதற்கு முன் கட்சி தேர்தல்கள் நடைபெற்ற போது இதேபோல்தான் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்களை கொடுக்க இதே அளவு கால அவகாசம்தான் கொடுக்கப்பட்டது. கடந்த முறை 2021ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்கள் நடந்தன.

அப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டன. அதனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுக்களை வாங்குவதில் தவறு இல்லை.

இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிமன்றம் பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.