Home நாடு மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்

மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் எனப் பதிவிட்ட துன் மகாதீரை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.

உண்மையிலேயே மகாதீர்தான் சர்வாதிகாரி – ஆனால் அவர் இன்னொருவரை அப்படிக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது என தன் முகநூலில் நஜிப் பதிவிட்டார்.

22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தபோதும், பின்னர் இரண்டாவது தவணைக்கு அவர் பிரதமரானபோதும், மகாதீர் நிகழ்த்திய சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளையும்  நஜிப் பட்டியலிட்டார்.