Home கலை உலகம் ‘போன் கவாலா’ – உள்ளூர் தெலுங்கு டெலிமூவியுடன் உகாதியைக் கொண்டாடுங்கள்

‘போன் கவாலா’ – உள்ளூர் தெலுங்கு டெலிமூவியுடன் உகாதியைக் கொண்டாடுங்கள்

629
0
SHARE
Ad

  • ‘போன் கவாலா’ என்ற உள்ளூர் தெலுங்கு டெலிமூவியுடன் உகாதியைக் கொண்டாடுங்கள்

  • மார்ச் 22, இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – தெலுங்குப் புத்தாண்டான உகாதியை முன்னிட்டு மார்ச் 22, இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும்​​ ‘போன் கவாலா’ எனும் உள்ளூர் தெலுங்குக் குடும்ப நாடக டெலிமூவியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

#TamilSchoolmychoice

உள்ளூர் திரைப்பட இயக்குநர் விக்னா அஷ்வீன் சக்ரவர்த்தி இயக்கிய இந்த டெலிமூவியில் வேமன்னா அப்பன்னா, புனிதா சண்முகம், டிஷாலனி ஜாக் மற்றும் ஜெய் ஸ்வானி உள்ளிட்டப் பிரபல உள்ளூர் திறமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அர்வின் ராஜா- மேக்சன் பாடியக் கருப்பாடலையும் இரசிகர்கள் ஆன் டிமாண்ட் வழியாக இரசிக்கலாம்.

விவேகக் கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களைத் தங்கள் குழந்தைகள் பயன்படுத்துவதைத் தடைச் செய்யும் அலுவலகத்தில் பணிப்புரியும் பெற்றோரைப் போன் கவாலா சித்திரிக்கிறது. இருப்பினும், தங்கள் மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு இந்தப் பெற்றோர்கள் சமூக ஊடக உலகத்தை ஆராய முடிவுச் செய்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் தங்கள் மகளுக்குப் பாடம் கற்பிக்க எண்ணியிருந்தாலும், சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்டுத் தங்களின் பெற்றோர் பொறுப்புகளையும் மறந்தனர். ஒரு காணொலி தற்செயலாகச் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகும்போது சூழ்நிலை மோசமடைகின்றது. இணையவாசிகளின் கடுமையானக் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கையாளும் கடினமானத் தருணத்தில் குடும்பம் இருக்கையில், ​​அவர்கள் ஒன்றிணைந்து ஏற்பட்டச் சிக்கலுக்கு தீர்வுக் காண வேண்டியக் கட்டாயத்திற்க்குத் தள்ளப்படுகின்றனர்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.