Home நாடு நஜிப் மகன் முகமட் நசிபுடின் லங்காவி அம்னோ தொகுதி தலைவராக வெற்றி

நஜிப் மகன் முகமட் நசிபுடின் லங்காவி அம்னோ தொகுதி தலைவராக வெற்றி

551
0
SHARE
Ad
முகமட் நசிபுடின் – நஜிப் மகன்

லங்காவி : சிறையில் ஊழல் வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இரண்டு மகன்கள் அரசியலில் குதித்திருக்கின்றனர்.

மூத்த மகன் முகமட் நிசார் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக இருக்கிறார். பெக்கான் தொகுதியின் கீழ் வரும் பெராமு ஜெயா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்றொரு மகனான முகமட் நசிபுடின் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கெடாவில் உள்ள லங்காவி அம்னோ தொகுதி தலைவராகப் போட்டியிட்டார். அந்தப் போட்டியில் அவர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

அம்னோ கட்சித் தேர்தல்கள் தற்போது இறுதிக் கட்ட நிலையில் இருந்து வருகின்றன.