Home நாடு மகாதீரின் இன்னொரு மகன் மொக்சானி மீதும் ஊழல் விசாரணை

மகாதீரின் இன்னொரு மகன் மொக்சானி மீதும் ஊழல் விசாரணை

352
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மூத்த மகன் மிர்சான் மகாதீர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஜனவரி 17 (2024) முதல் விசாரணைகள் நடத்தி வரும் வேளையில், மகாதீரின் மற்றொரு மகனான மொக்சானி மீதும் ஊழல் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அரசாங்க நிறுவனம் ஒன்றின் தொடர்பில் வாக்குமூலம் வழங்க, மொக்சானி மகாதீர் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 11.00 மணியளவில் வருகை தந்தார்.

இந்தத் தகவலை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியும் உறுதிப்படுத்தினார்.