Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம், அரசியல் செயலாளர் – டத்தோஸ்ரீ நபர் – தடுப்புக் காவலை நீட்டித்தது

ஊழல் தடுப்பு ஆணையம், அரசியல் செயலாளர் – டத்தோஸ்ரீ நபர் – தடுப்புக் காவலை நீட்டித்தது

326
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்களை ஊழல் தொடர்பாக கைது செய்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சில நாட்களுக்கு முன்னர் கைது செய்த ஒரு முன்னாள் அரசியல் செயலாளர் – டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு நபர் – ஆகிய இருவரின் தடுப்புக் காவலை எதிர்வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டித்தது.

புத்ரா ஜெயா கீழமை நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட்) இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் ஒரு குறிப்பிட்ட அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட குத்தகைகளுக்காக கையூட்டுகள் பெற்றதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

2020, 2021-ஆம் ஆண்டுகளில் இந்த இரு நபர்களும் மில்லியன் கணக்கான ரிங்கிட் பணத்தைக் கையூட்டாகப் பெற்றனர் என்ற புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.