Home இந்தியா பீகார் : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு

பீகார் : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு

484
0
SHARE
Ad
நிதிஷ்குமார்

புதுடில்லி : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய அரசியலில் பரபரப்பான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்பட்ட கட்சி பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு என்ற ஐக்கிய ஜனதா தளம். அதிரடியாக அந்தக் கட்சி பாஜவில் இணைந்து அதன் மூலம் நிதிஷ்குமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) மீண்டும் பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இதன் காரணமாக இந்தியா கூட்டணி வலுவிழந்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

மாநில முதல்வராக 9-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

நிதிஷ் குமார் சட்டசபை தேர்தலில் கடந்த 35 ஆண்டுகளாக போட்டியிடாமலே 9-வது முறையாக முதல்வர் பதவியேற்றுள்ளது இந்திய அரசியலில் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

பீகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஜேடியூ போட்டியிட்டது. வெற்றியும் வெற்றி பெற்றது.

243 சட்டசபை தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 74 தொகுதிகளில், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது. இதையடுத்து நிதிஷ் குமார் முதல்வரானார். இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்று இருந்தது.

லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி தலைவரவாக செயல்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் பாஜகவிலிருந்து நிதிஷ் குமார் 2022-இல் வெளியேறினார்.

நிதிஷ்குமாரின் ஜேடியூ, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற உள்ளூர் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க அந்தக் கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ் குமார் நீடித்தார். லாலு பிரசாத் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வாக இருந்தார்.

‛இந்தியா’ கூட்டணியிலும் நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

இன்று மாலையில் நிதிஷ் குமார் 9-வது முறையாக பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்து வருகிறார். 9 வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்று இருந்தாலும் கூட ஒருமுறை மட்டுமே அவர் எம்எல்ஏவாக ஆகி உள்ளார். அதுவும் கடந்த 1985-ஆம் ஆண்டில் தான். அதன்பிறகு கடந்த 35 ஆண்டுகளாக நிதிஷ் குமார் எம்எல்ஏ ஆகாமலே முதல்வர் பதவி வகித்து வருவது சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருப்பதால்தான். பீகார் மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இன்னும் செயல்படுகிறது. தமிழ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே சட்டமன்ற மேலவை ரத்து செய்யப்பட்டுவிட்டது.