Home Video ஷாருக்கானின் ஜவான் : தமிழ் முன்னோட்டம் வெளியீடு

ஷாருக்கானின் ஜவான் : தமிழ் முன்னோட்டம் வெளியீடு

493
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ் – தெலுங்கு மொழிகளிலும் வெளியீடு காணவிருக்கும் ‘ஜவான்’ இந்திப் படத்தின் தமிழ் முன்னோட்டம் (டிரெய்லர்) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வெளியிடப்பட்ட ஒரே நாளில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யூடியூப் தளத்தில் மட்டும் இந்த முன்னோட்டத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஜவான் முன்னோட்டம் பல வகைகளிலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. ஓர் இராணுவ அதிகாரியாக ஷாருக்கான் காட்டப்படுகிறார். அவரின் இளமைப்பருவ காட்சிகளும் காட்டப்படுகின்றன. விஜய் சேதுபதியும் இளமைத் தோற்றத்தில் காட்டப்படுகிறார். ஆயுத வியாபாரியாக அவரின் வில்லன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஷாருக்கான் ரயிலை பயணிகளோடு கடத்தும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. நயன்தாரா காவல் துறை அதிகாரியாக வருகிறார். படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஜவான் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: