Home Video ஜவான் : ஷாருக்கான்-விஜய் சேதுபதி மோதல் செப்டம்பர் 7 முதல் தொடக்கம்

ஜவான் : ஷாருக்கான்-விஜய் சேதுபதி மோதல் செப்டம்பர் 7 முதல் தொடக்கம்

554
0
SHARE
Ad

சென்னை : பெரும் எதிர்பார்ப்பை இந்தியத் திரையுலகில் எழுப்பியிருக்கும் இந்திப் படம் ஜவான். நமது தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் படம். காரணம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. ஷாருக்கானை இயக்குவது நம்மூர் அட்லீ – இணைவது நயன்தாராவும் – வில்லனாக விஜய் சேதுபதியும் – என்பதுதான் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்ப்பதற்கான காரணம்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் முழுமையான உருவத் தோற்றமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி மரணத்தின் வியாபாரி என்ற வாசகத்துடன் அண்மையில் அவரின் இலைமறை காய் புகைப்படம் ஒன்று மட்டும் வெளியிடப்பட்டது.

தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவிருக்கும் ஜவான் படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) தமிழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரையில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த முன்னோட்டத்தைப் பார்ப்போமா? கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் அந்த பரபரப்பான முன்னோட்டத்தைப் பார்க்கலாம்: