பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தான் நியமிக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவிலும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதியமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறார்.
தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஸ்ரேத்தா தவிசின் ஏற்பார் என்று அவரது பியூ தாய் கட்சியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
61 வயதான ஸ்ரேத்தா, ரியல் எஸ்டேட் என்னும் சொத்துடமைத் துறையின் தொழிலதிபர். சில மாதங்களுக்கு முன்பு அரசியலுக்குத் தள்ளப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம், அவர் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டார்.
எதிர்வரும் வாரத்தில் தனது 11-கட்சி கூட்டணியில் இருந்து ஓர் அமைச்சரவையை அவர் கட்டமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 15 ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவாத்ரா நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டு, 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.