Home நாடு செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை

செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை

497
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறைவாசம் அனுபவித்து வரும் நஜிப் தற்போது செராஸ் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.

நஜிப்புக்கு, மற்ற கைதிகள் போல் அல்லாமல் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன என முறைமுகப் பெயரில் இயங்கும் சமூக ஊடகம் ஒன்று குறைகூறியிருந்தது. அதனை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், நஜிப்புக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் காட்டப்படுவதில்லை என்றும் அவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதன் விளைவாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படியே அவர் செராஸ் புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கைரி மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவருக்கான பிசியோதெராபி எனப்படும் உடல்தசை சீரமைப்பு சிகிச்சைகள் முடிவுக்கு வந்ததும் அவர் செராஸ் மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார் என்றும் கைரி தெரிவித்தார்.