Home நாடு வாரிசான் கட்சியில் மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் இணைகிறாரா?

வாரிசான் கட்சியில் மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் இணைகிறாரா?

696
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சபா முன்னாள் முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் சபா கட்சி மேற்கு மலேசியாவில் மெல்ல மெல்ல தன் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

ஆங்காங்கு, மாநில அளவிலும், தொகுதி அளவிலும் வாரிசான் கட்சிக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. மேலும் பல தேசிய நிலை தலைவர்களையும் அடையாளம் கண்டு தன் கட்சியில் இணைத்துக் கொண்டு வருகிறது.

மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் ஓங் தீ கியாட் விரைவில் வாரிசான் கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதுகுறித்த அறிவிப்பை ஷாபி அப்டால் பத்திரிகையாளர் சந்திப்பில் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மசீச, மட்டுமின்றி ஜசெகவிலிருந்தும் சிலர் விரைவில் வாரிசான் கட்சியில் இணைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.