Home நாடு சுங்கை பாக்காப் : மனம் மாறிய மசீசவும் களமிறங்குகிறது!

சுங்கை பாக்காப் : மனம் மாறிய மசீசவும் களமிறங்குகிறது!

279
0
SHARE
Ad
வீ கா சியோங்

ஜோர்ஜ் டவுன் : நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்த முறை மனம் மாறிய மசீசவும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகிறது.

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஜசெகவுக்கு ஆதரவளிக்க முடியாது என மசீச ஒதுங்கிக் கொண்டது. அதற்கான காரணங்களையும் வீ கா சியோங் பட்டியலிட்டார்.

இருப்பினும் அந்த இடைத் தேர்தலில் ஜசெக வெற்றி பெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்தாலும் பிரச்சனையான இடைத் தேர்தலில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஜசெகவுக்கு ஆதரவளித்திருக்கலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

வேறு சிலரோ, மசீசவின் உறுதியான நிலைப்பாட்டை, பாராட்டினர். இந்நிலையில் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் மசீச தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்தது. காரணம் இந்த முறை பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது.

ஜோகூர்பாருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் வீ கா சியோங் பத்திரிகையாளர்களிடம் உரையாடியபோது, சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு ஒத்துழைப்பும் வேண்டிய பிரச்சாரங்களும் செய்வோம் என உறுதியளித்தார்.