Home நாடு சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் 4,267 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி!

சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் 4,267 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி!

335
0
SHARE
Ad

சுங்கை பாக்காப் : இன்று நடைபெற்ற பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபாங் அபிடின் வெற்றி பெற்றார்.

56 வயது முன்னாள் போக்குவரத்து துறை அதிகாரியான அபாங் அபிடின் 14,489 வாக்குகள் பெற்று 4,267 பெரும்பான்மையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிபின் 10,222 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

#TamilSchoolmychoice

63.45 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். 208 செல்லாத வாக்குகள் பதிவாயின.