Home நாடு மஇகா உதவித் தலைவர் தேர்தல்: டத்தோ டி.மோகன் தோல்வி!

மஇகா உதவித் தலைவர் தேர்தல்: டத்தோ டி.மோகன் தோல்வி!

591
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் மீண்டும் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் டத்தோ டி.மோகன் தோல்வி கண்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் முதலாவதாக ஜோகூர் மாநிலத்தின் டத்தோ எம்.அசோஜனும் 2-வது நிலையில் டத்தோ டி.முருகையாவும், 3-வது நிலையில் புதியவரான டத்தோ நெல்சன் ரங்கநாதனும் வெற்றி பெற்றனர்.

டத்தோ டி.மோகன் இந்தப் போட்டியில் தோல்வி கண்டார். கடந்த 2021 கட்சித் தேர்தல்களில் மோகன் முதலாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

மஇகா கட்சித் தேர்தல்களில் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்ற பதவிகளுக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்றது.

மஇகாவின் 3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 4 பேர் தேர்தல் களத்தில் குதித்தனர்.

நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா, டத்தோ எம்.அசோஜன் ஆகிய மூவரும் தங்களின் உதவித் தலைவர் பதவிகளைத் தற்காக்க மீண்டும் போட்டியிட்டனர்.

புதிய வேட்பாளராக மஇகா கல்விக் குழுத் தலைவரும் செனட்டருமான டத்தோ நெல்சன் ரங்கநாதன், போட்டியிட்டார்.