Home நாடு சரவணன், மீண்டும் தேசியத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு!

சரவணன், மீண்டும் தேசியத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு!

438
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் 2024-2027 மூன்றாண்டுகால தவணைக்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.

தேர்தல் குழுத் தலைவராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பணியாற்றினார்.  மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒருவர் மட்டுமே துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்தார். வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து சரவணன் மீண்டும் போட்டியின்றி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரவணன் இரண்டாவது தவணையாக துணைத் தலைவராகத் தொடர்கிறார்.

சரவணன் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இன்றைய வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பாக அவர் இளம் வயது முதல் வாழ்ந்த கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வட்டாரத்தில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று வழிபட்டார்.