Home நாடு விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

460
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடப்பு தேசியத் தலைவர் பதவிக்கான தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று மார்ச் 27-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின் போது விக்னேஸ்வரனை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக மஇகா தேசியத் துணைத் தலைவரும் தேசியத் தலைவர் தேர்தலுக்கான குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்தார்.