Home நாடு ஜெய்சங்கர் பிரதமரைச் சந்தித்தார்!

ஜெய்சங்கர் பிரதமரைச் சந்தித்தார்!

287
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவுக்கான வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று புதன்கிழமை (மார்ச் 28) புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.

பிரதமருடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் அன்வாரிடம் சமர்ப்பித்ததாக ஜெய்சங்கர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் தொடர்ந்து வரும் பாரம்பரிய, புதுயுக நல்லுறவுகள் தூரநோக்கு இலக்குடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற பிரதமர் அன்வாரின் சிந்தனை இருநாடுகளுக்கும் இடையிலான உறவின் புதிய சகாப்தங்களை எட்டும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

வட்டார விவகாரங்களில் பிரதமர் அன்வாரின் வழிகாட்டுதலும், அவரின் ஆழமான சிந்தனைகளும் தனக்கு மிகவும் பயனளித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.