Home இந்தியா தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் மரணம்

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் மரணம்

312
0
SHARE
Ad
அ.கணேசமூர்த்தி

ஈரோடு: கடந்த 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.

இந்த முறை மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். கணேசமூர்த்திக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான அவர் கடந்த மார்ச் 24-ஆம் தேதிக்கு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட உடல்பாதிப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார் 76 வயதான கணேசமூர்த்தி. இந்நிலையில், அவர் இன்று வியாழக்கிழமை (மார்ச் 28) மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.