முதல் வகை உள்ளூர் தமிழ் கற்பனை நாடகமும் விண்மீன் பிரத்தியேகத் தொடருமான ‘இரவு வண்ணங்கள்’ மார்ச் 25 முதல் ஒளிபரப்புக் காணுகிறது
கோலாலம்பூர் – மார்ச் 25 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் விருது வென்ற உள்ளூர் இயக்குநர் ரவின்தாஸ் அரிதாஸ் இயக்கிய இரவு வண்ணங்கள் எனும் தனித்துவமான உள்ளூர் தமிழ் கற்பனை நாடகம் மற்றும் விண்மீன் பிரத்தியேகத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம்.
ஒரு குடும்பம் சுமந்த ஏழு தலைமுறைச் சாபம் பச்சையின் (டெட்டு) மூலம் 29 வயதானக் கர்ணனுக்குத் தொடர்வதை இந்தத் தொடர் சித்திரிக்கிறது.
தனதுப் பெற்றோர் உட்படத் தனதுக் குடும்ப உறுப்பினர்களின் திருமண வாழ்க்கையைப் பாதித்தச் சாபத்திலிருந்துத் தனது அன்புக்குரியக் குடும்பத்தை மீட்க அவர் முயற்சிக்கிறார். சாபத்திலிருந்து விடுபட, காதலின் மீதான தனது அவநம்பிக்கையால் பிரிந்தாலும் தம்பதிகள் என விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஜோடிகளை மீண்டும் கர்ணன் இணைக்க வேண்டும் என்ற ஒரு கடினமானத் தீர்வை அவர் எதிர்கொண்ட ஒரு மர்மமானப் பூனை வழங்கியது. கர்ணன் இந்த ஜோடிகளை மீண்டும் இணைப்பாரா? அதனை அறிய, விருது வென்ற நடிகர் மற்றும் இயக்குநர் யுவராஜ் கிருஷ்ணசாமி, பிக் பாஸ் தமிழ் சீசன் 6 புகழ் நிவா ஷினி, தர்மா தேவர், நவின் ஹோ, பால கணபதி வில்லியம், சுபாஷினி மற்றும் பலர் உட்படத் திறமையான நடிகர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் இரவு வண்ணங்கள் தொடரைக் காணுங்கள்.
ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் இரவு வண்ணங்கள் தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.