சென்னை : பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டேனியல் பாலாஜி காலமானார். நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வீட்டில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே டேனியல் பாலாஜி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
திரையுலகினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் என பல படங்களில் வித்தியாசமாக வில்லன் பாத்திரங்களில் மிரட்டியவர் டேனியல் பாலாஜி.
சித்தி தொலைக்காட்சி தொடரில் முதன் முதலில் அவர் நடித்தார். அதன் பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் வாய்ப்பு பெற்றார்.
இளம் வயதிலேயே அவர் மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.