Home நாடு ‘பாடு’ – முதன்மைத் தரவுத் தளத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவு

‘பாடு’ – முதன்மைத் தரவுத் தளத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவு

437
0
SHARE
Ad
பாடு தரவுத் தள சின்னத்துடன் ரபிசி ரம்லி

புத்ரா ஜெயா :நாட்டின் முதன்மைத் தரவுத் தளமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘பாடு’ – தளத்தில் பதிந்து கொள்ள இன்றே இறுதி நாள் என்ற நிலையில் இதுவரையில் அதில் பதில் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியிருக்கிறது.

நேற்று சனிக்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 12.30 மணிவரை 10.03 மில்லியன் பேர் பதிந்து கொண்டுள்ளனர். அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி 30.08 மில்லியன் பேர் பாடுவில் பதிந்து கொள்ள தகுதி பெற்றிருக்கின்றனர்.

பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் சிந்தனையில் உருவாகி அறிமுகமானது ‘பாடு’ (Padu) என்ற முதன்மைத் தரவுத் தளம் குறுஞ்செயலி.

#TamilSchoolmychoice

அதில் பதிந்து கொள்ள சிரமங்கள் ஏற்படுவதாகவும், நிறைய தனிநபர்  விவரங்கள் கேட்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ரபிசி ரம்லியைப் பணித்திருந்தார். ஒரு சில அரசியல்வாதிகள், பாடு தரவுத் தளத் திட்டம் ரபிசி ரம்லியின் தோல்விக்கான அடையாளம் என சாடியுள்ளனர்.

மலாய்க்காரர் அல்லாதார் பெருமளவில் இந்த பாடு தரவுத் தளத்தில் பதிந்து கொள்ள முன்வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவுகளைப் பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை என அரசாங்கத் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

மிக அதிக அளவிலான தனிப்பட்டத் தகவல்கள் கோரப்படுவதால் பலரும் பாடுவில் பதிந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர் எனக் கூறப்படுகிறது.