Home நாடு கோலகுபுபாரு : மஇகாவைத் தொடர்ந்து மசீசவும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது

கோலகுபுபாரு : மஇகாவைத் தொடர்ந்து மசீசவும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது

339
0
SHARE
Ad

கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாததால் தாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என மசீச அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மசீச தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கனவே, மஇகாவும் இதே போன்ற முடிவை அறிவித்தது. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகா கோலகுபுபாரு தேர்தலில் பங்கேற்காது என்ற முடிவை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு மே 11 நடைபெறும்.