Home இந்தியா தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

403
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது அதிகமான வாக்குப் பதிவு என கணிக்கப்படுகிறது. அதிக பட்சமாக 75.64% வாக்கு கள்ளக் குறிச்சி தொகுதியில் பதிவாகியிருக்கிறது.

வட நாட்டு மாநிலங்களில் வாக்கு விழுக்காடு பதிவு மந்தமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தொகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட விழுக்காட்டில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

#TamilSchoolmychoice

கடைசி ஒரு மணி நேரத்தில் தமிழ் நாடு முழுவதும் 10 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. கடுமையான வெயில் காரணமாக காலையில் வர முடியாதவர்கள், காத்திருந்து மாலையில் வெயில் தணிந்ததும் வாக்களிக்க வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.