பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
தாங்கள் நடத்தப் போகும் தாக்குதலை இஸ்ரேல் முன்கூட்டியே தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்தது. எனினும் அந்தத் தாக்குதலுக்கு தாங்கள் அனுமதி அளிக்கவில்லை என ஜோ பைடனின் அரசாங்கம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் பாலஸ்தீனத்திற்கு முழுமையான உறுப்பியம் வழங்கப்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதன் காரணமாக அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.