Home நாடு சுங்கை பாக்காப்: மக்களின் குரலை நாங்கள் ஏற்கிறோம்! அன்வார் அறிவிப்பு

சுங்கை பாக்காப்: மக்களின் குரலை நாங்கள் ஏற்கிறோம்! அன்வார் அறிவிப்பு

276
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பாக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரின் தோல்வியை மதித்து ஏற்றுக்கொள்வதாக ஒற்றுமை கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

“சுங்கை பாக்காப் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் சுமுகமாகவும் அமைதியாகவும் நடந்தேறியது. பிரதமர் என்ற முறையில், மதானி அரசாங்கத்தின் புதிய திசையில் நாடு தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களின் அலைகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இருக்கும்போது, சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி மக்களின் குரலை நான் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

மதானி அரசாங்கம் இந்த முடிவை உணர்ந்து, மக்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான உறுதியை மெருகேற்றி, அதே நேரத்தில் மக்கள் மற்றும் நாட்டின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முனையும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உறுதியான கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன், ஒற்றுமை கூட்டணி இன்றைய நடைமுறைக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் முயற்சிகளை செயல்படுத்துவதில் ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்தும். மேலும் நாட்டின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் எனவும் அன்வார் உறுதியளித்தார்.