Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-க்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன

ஆஸ்ட்ரோவில் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-க்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன

397
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022க்கான நேர்முகத்தேர்வுகள் இப்போது நடத்தப்படுகின்றன.

கோலாலம்பூர் – 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, தொலைக்காட்சி அல்லது வானொலித் தொகுப்பாளராகப் பணியைத் தொடங்க விரும்பும் ஆர்வமுள்ள மலேசியத் திறமையாளர்கள் அதற்கான வாய்ப்பைப் பெற, அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 எனும் ஆஸ்ட்ரோவில் நடத்தப்படும் திறமையாளர்களுக்கானத் தேடலில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

ஜொகூர் பாரு, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நேர்முகத்தேர்வுகள் பின்வருமாறு நடைபெறும்:

#TamilSchoolmychoice

• 8 செப்டம்பர்: அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், மிட் வேலிக் கண்காட்சி மையம், தி மால், மிட் வேலி சவுத்கி, ஜொகூர் பாரு

• 29 செப்டம்பர்: அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், ஸ்ரீ மாரியம்மன் மண்டபம், பட்டர்வர்த், பினாங்கு

• 15 அக்டோபர்: அஜெண்டா சூரியா ஷாப்பிங் கார்னிவல், ஓப்பன் கார்பார்க் பி, தேசிய விளையாட்டு அரங்கம், புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “பல்வேறு உள்ளூர் திறமையாளர்களுடன் நாங்கள் தொடர்ந்துப் பணியாற்றுவதால், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பிரகாசிக்க வாய்ப்பளிக்கவும் ஒரு தளத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உள்ளூர் கலைத் துறையில் தங்கள் கனவுகளை அடையவும் மெய்ப்பிக்கவும் ஆர்வமுள்ள உள்ளூர் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களுக்கு அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022 எனும் ஆஸ்ட்ரோவில் நடத்தப்படும் திறமையாளர்களுக்கானத் தேடல் சிறந்த ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.”

நேர்முகத்தேர்வின் போது, தொகுப்பாளராகவோ அல்லது அறிவிப்பாளராகவோ பங்கேற்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். மேலும், ஆஸ்ட்ரோ உலகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் பாடலைத் தேர்வுச் செய்துப் பாடலாம் அல்லது நடனமும் ஆடலாம்.

மேல் குறிப்பிட்டத் தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வுகளின் முதல் நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டப் போட்டியாளர்கள் இரண்டாம் நாள் பங்கேற்க மீண்டும் அழைக்கப்படுவர். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 21, அஜெண்டாச் சூரியா ஷாப்பிங் கார்னிவல், புக்கிட் ஜாலில், கோலாலம்பூரில் நடைப்பெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு இடத்திலிருந்தும் மூன்று இறுதிப் போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.

U Mobile, ASC Agenda Suria Communication உடன் இணைந்து அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-ஐ வழங்குகிறது. இத்திறமையாளர்களுக்கானத் தேடலின் மேல் விபரங்கள் ஆகஸ்டு இறுதி முதல் ஆஸ்ட்ரோ உலகத்தில் கிடைக்கப் பெறும்.