Home கலை உலகம் ‘ராப் போர்க்களம்’ சீசன் 2 இறுதிப் போட்டியாளர்களுடன் சிறப்பு நேர்காணல்

‘ராப் போர்க்களம்’ சீசன் 2 இறுதிப் போட்டியாளர்களுடன் சிறப்பு நேர்காணல்

336
0
SHARE
Ad

அண்மையில் ஆஸ்ட்ரோவில் ஒளியேறி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த தொடர் ‘ராப் போர்க்களம் சீசன் 2. இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்:

1. உங்களின் ராப் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள் என்பதற்கானச் சில பின்னணியைப் பகிர்ந்துக் கொள்ளவும்.

ஆஸ்ட்ரோ ராப் போர்க்களம் இறுதிச் சுற்றுப் போட்டியாளர் ஓ.ஜி.பேங்கர்ஸ்

ஓஜி பேங்கர்ஸ்: நான் ப்ரீஸ்டைலிங் மூலம் ராப் செய்யத் தொடங்கினேன். மேலும், எனது நண்பர்களுடனும் வெளியாட்களுடனும் ராப் போட்டியிலும் ஈடுப்பட்டேன். பின்னர், நான் பாடல் வரிகளை எழுதத் தொடங்கினேன். காலப்போக்கில், ராப் செய்யும் எனதுத் திறன் மேம்பட்டது. ‘வெஸ்ட் இன்கார்னேஷன்’ என்ற ராப்பர்களின் குழுவையும் நான் உருவாக்கினேன்.

ஆஸ்ட்ரோ ராப் போர்க்களம் இறுதிச் சுற்றுப் போட்டியாளர் ஷெரன் ஜி

ஷெரன் ஜி: உள்ளூர் இசை ஜாம்பவானான டார்க்கியின் இசையைக் கேட்டு வளரந்த என்னை அவரது இசை ஒரு நல்லக் கலைஞராகத் தூண்டியது. ‘வல்லவன்’ பாடல்கள் தொகுப்பு வெளியாகும் வரை நான் ராப் பாடகனாக எப்போதும் நினைத்ததில்லை. பிறகு, இசை என்னை ஊக்கப்படுத்தியது. பல வருடங்களாக என் ஐடலின் பாடல்களைப் பின்பற்றியப் பிறகு, நான் என் சொந்த வரிகளை எழுத ஆரம்பித்தேன். மற்றவை வரலாறு என்றுதான் கூறுவேன்.

ஆஸ்ட்ரோ ராப் போர்க்களம் இறுதிச் சுற்றுப் போட்டியாளர் வேதன்
#TamilSchoolmychoice

வேதன்: எனது ராப் பயணம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் தொடங்கியது. ‘Dr Burn’s Sollisai Challenge’-க்காக எனது முதல் தமிழ் வசனத்தை தயாரித்தேன். ‘அகண்டன்’ என்ற ஒரு கலவையையும் வெளியிட்டிருக்கிறேன்.

ஆஸ்ட்ரோ ராப் போர்க்களம் இறுதிச் சுற்றுப் போட்டியாளர் டர் சிவா

டர்சிவா: பக்திப் பாடல்களைப் பாட எனக்கு மிகுந்த விருப்பம். அதுவே என் சொந்தப் பாடலை உருவாக்கத் தூண்டியது. உள்ளூர் ‘உருமி மேளம்’ குழுவில் பாடகராகவும் இருந்தேன்.

ஆஸ்ட்ரோ ராப் போர்க்களம் இறுதிச் சுற்றுப் போட்டியாளர் தேவ்

டேவ் எவட்: மெல்லிசைப் பாடகராகப் பயணத்தைத் தொடங்கிய நான், பிறகு பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் மாறினேன். சிலச் சமயங்களில், நான் பாடல்களில் ராப் பகுதிகளை இசையமைத்தேன். எனதுப் பதிவுச் செய்யும் கலைஞர்களுக்கு ராப் பகுதிகளைக் கற்பிப்பதற்கு முன்பு நான் அவற்றை முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அது ராப் பற்றி மேலும் அறிய என்னைத் தூண்டியது. ராப் போர்க்களம் சீசன் 2-இல் மற்ற ராப்பர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்.

2. வளர்ந்து வரும் ராப் கலைஞராக உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் பயணத்தில் ராப் போர்க்களம் சீசன் 2 உங்களுக்கு எவ்வாறு உதவியது?

ஓஜி பேங்கர்ஸ்: ராப் பாடகராக எனதுப் பயணத்தில் ராப் போர்க்களம் சீசன் 2 முக்கியப் பங்கு வகித்தது என்றுதான் கூறுவேன். நடுவர்கள், வழிகாட்டுநர்கள், தொகுப்பாளர்கள், குழுவினர் மற்றும் எனதுச் சகப் போட்டியாளர்களிடமிருந்து நிறையத் தகவல்களையும் உதவிக்குறிப்புகளையும் பெற்றேன். ராப் கலைஞராக இது எனது முதல் நிகழ்ச்சி. இத்தருணத்தை என் வாழ்வில் நான் என்றென்றும் போற்றுவேன்.

ஷெரன் ஜி: ராப் போர்க்களம் சீசன் 2 என்னை ஒரு ராப் கலைஞராகச் செதுக்கிய ஒரு தளமாகும். மரியாதைக்குரிய நடுவர்கள் குழுவிற்கும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டத் தயாரிப்புக் குழுவிற்கும் நான் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.

வேதன்: குரல் மற்றும் பாடல் வரிகளை மேம்படுத்துவது உட்படப் பல மதிப்புமிக்கப் பாடங்களை எனக்கு ராப் போர்க்களம் சீசன் 2 கற்றுக் கொடுத்தது. நடுவர்களும் வழிகாட்டுநர்களும் எங்களின் திறனைத் தட்டி எழுப்பி வெளியேக் கொண்டு வந்தனர். மற்ற ராப் கலைஞர்களுடனான ஒற்றுமை தமிழ் ஹிப் ஹாப்பின் திறனுக்கு உறுதியளிக்கிறது.

டர்சிவா: ராப் போர்க்களம் சீசன் 2 -இல் பங்கேற்றதன் மூலம், எனது இரசிகர்களும் ஆதரவாளர்களும் பெருகி, தங்களின் ஆதரவால் என்னை ஆசீர்வதித்தனர். ராப் கலைஞராக எனதுப் பயணத்தைத் தொடர்ந்ததில் இருந்து நான் பெற்ற மிக மதிப்புமிக்கப் பரிசு இதுதான் என்று நான் கூறுவேன்.

டேவ் எவட்: தமிழ் ஹிப் ஹாப்பின் முன்னோடிகளிடமிருந்துப் பல்வேறு பாணிகளிலும் வகைகளிலும் ராப் இசையைக் கற்றுக்கொண்டதால் ராப் போர்க்களம் சீசன் 2 எனக்கு ஒரு கற்றல் களமாக இருந்தது. மெல்லிசைப் பாடகரிலிருந்து ராப் கலைஞராக என் வாழ்க்கை முறையை இந்தப் பயணம் முற்றிலும் மாற்றிவிட்டது.

3. ராப் போர்க்களம் சீசன் 2-இன் இறுதிப் போட்டிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

ஓஜி பேங்கர்ஸ்: இறுதிப் போட்டி மிகப் பெரியது. அங்கு நான் எனது சிறந்ததைக் கொடுக்கப் போகிறேன். எனதுப் படைப்பை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

ஷெரன் ஜி: சிறந்த மனிதன் வெற்றிப் பெறட்டும்!

வேதன்: நான் எனதுச் சிறந்ததைக் கொடுப்பேன், இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக நான் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

டர்சிவா: போட்டியில் வெற்றிப் பெற அல்லது மக்களின் இதயங்களை வெல்ல.

டேவ் எவட்: ராப் போர்க்களம் சீசன் 2-இன் இறுதிப் போட்டி முந்தைய அத்தியாயங்களைப் போலவே ஆரோக்கியமானப் போட்டிக்களமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

போட்டியாளர்களுக்கிடையேயான நல்லதிர்வுகள் நான் கற்பனைச் செய்ததை விட அதிகமாக உள்ளன. மேலும் இறுதிப் போட்டியிலும் அவற்றைப் பராமரிக்க முடியும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், இறுதிப் போட்டியை மிகவும் சுவாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் மாற்றப் புதியச் சவால்களை எதிர்ப்பார்க்கிறேன்.