நஜிப் சிறையில் இருக்கும் நேரத்தில், பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற நெருக்குதல்கள் பிரதமரை நோக்கி எழுப்பப்படும் வேளையில் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் 15-வது பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
அக்டோபர் 28-ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவிருந்த 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) முன்கூட்டியே அக்டோபர் 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.