Home நாடு நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்

நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்

776
0
SHARE
Ad

காஜாங் : செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 23) கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காஜாங் சிறைச்சாலைக்கு தண்டனையை அனுபவிக்கக் கொண்டு செல்லப்பட்ட நஜிப் துன் ரசாக் தொடர்ந்து அங்கேயே இருந்து வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என ஆரூடங்கள் கூறப்பட்ட நிலையில், அவரின் சிறப்புச் செயலாளர் அகமட் லுட்பி அசார், நஜிப் தொடர்ந்து காஜாங் சிறையில் இருந்து வருவார் எனத் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை சிறையில் இரண்டு இரவுகளைக் கழித்த நிலையில் நஜிப் பலத்த பாதுகாப்புடன் 1எம்டிபி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.