Home இந்தியா விஜயகாந்த் 70-வது பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து

விஜயகாந்த் 70-வது பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து

635
0
SHARE
Ad

சென்னை : ஒருகாலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகனாகவும், பின்னர் தீவிர அரசியலிலும் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று ஆகஸ்ட் 25-ஆம் தேதி தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எளியோரை அரவணைக்கும் வள்ளல் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் தற்போது உடல் நலம் குன்றியிருக்கிறார்.